இந்தியா வந்த பிரான்ஸ் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் நேற்று இரவு இந்தியாவுக்கு வந்தார்.

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை, இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றார்.

மேக்ரான், நாளை நடைபெற உள்ள சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இந்த மாநாட்டில் 121 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து, 12ஆம் திகதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், புதிதாக கட்டப்பட்டுள்ள சூரிய ஒளி உற்பத்தி ஆலையை மெக்ரான் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், இருநாட்டு பொருளாதாரம், அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி ஏற்றபின், இம்மானுவேல் மேக்ரானுக்கு இதுதான் முதல் இந்திய சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter
Narendra Modi Twitter

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்