பிரான்சை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

Report Print Kavitha in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

கலே பகுதியில் தங்கியிருக்கும் 900 அகதிகளுக்கு தூய்மையான குடிநீர் மற்றும் சுத்தமான தங்குமிட வசதிகள் வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் பிரான்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றின் கணக்கெடுப்பின் படி, கலே காட்டுப்பகுதியில் 900 வரையான அகதிகள் தங்கியுள்ளனர்.

பிரெஞ்சு அரசு இவர்களுக்கான உணவினை கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து வழங்கிவருகின்றது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான நிபுணர்கள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரான்சின் வடக்கு பிராந்தியங்களில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் புகலிடகோரிக்கையாளர்களுக்கு பிரெஞ்சு அரசு தூய்மையான குடிநீர் வழங்கவேண்டும். அதுமட்டுமின்றி தூய்மையான தங்குமிடங்களும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.' என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதை தவிர, தங்குமிடங்களை அகற்றுவது என்பது அகதிகளுக்கான நிரந்தர தீர்வாக இருக்காது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்