பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதித்த 900 அரசியல்வாதிகள்: தொடரும் எதிர்ப்புகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
120Shares
120Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றியபோது அவரை அவமதிக்கும் வண்ணமாக 900 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்தனர்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது சீர்திருத்த செயல்திட்டங்களை விளக்கி உரையாற்றும் கூட்டத்தில் ஜனாதிபதி மேக்ரானை ஒரு சர்வாதிகாரி என விமர்சித்து 900 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்தனர்.

அவரது உரையை மேற்கோள் காட்டி பேசிய இடதுசாரி தலைவர் Jean-Luc Melenchon மஹாராஜா முதலாம் மேக்ரானின் பெருமைகளை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

சட்டசபையிலும் செனட்டிலும் இருக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது முதலான சட்டமன்ற செயல்பாடுகளை நெறிப்படுத்துவது தொடர்பான அரசியல் சாசன மாற்றங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இமானுவல் மேக்ரானின் உரை மீதான விவாதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்க இருப்பதற்கு முன் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

நாளை, என் வாழ்வு, என் வேலை என்று அவரைப் பற்றியே பேசவிருக்கும் நீண்ட ஒரு உரையைக் கேட்க இருக்கிறோம் என்று விமர்சித்துள்ளார் Christian Jacob என்னும் அரசியல்வாதி.

பணக்காரர்களின் ஜனாதிபதி என அடிக்கடி விமர்சிக்கப்படும் மேக்ரான் சமீபத்தில், பீங்கான் தட்டுகள் வாங்கியதற்காக கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஏற்கனவே ரயில்வே ஊழியர்கள் உட்பட பலதரப்பினர் அவரது சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்