International
Notification
Notification
Submit Cancel

வங்கியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: ஊழியர்கள் சிறைபிடிப்பு

advertisement

ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தி ஊழியர்களை சிறைபிடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் உள்ள Waldshut நகரில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

தகவலை தொடர்ந்து பொலிசார் குறிப்பிட்ட அந்த வங்கியை சுற்றி பொலிசார் ஆயுதங்களுடன் சூழ்ந்துள்ளனர்.

மேலும், பொலிசார் நடத்திய எதிர் தாக்குதலில் வங்கியில் உள்ள மர்ம நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், உள்ளே உள்ள ஊழியர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பொலிசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டுடாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement