ஜேர்மனியில் சுவிஸ் நாட்டினர் 9 பேர் கைது

Report Print Basu in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் G-20 மாநாட்டிற்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சுவிஸ் நாட்டினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாம்பர்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹாம்பர்க் நகரில் நடைப்பெற்ற G-20 மாநாட்டிற்கு எதிராக சுமார் 12,000 பேர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டக்கார்களை ஒடுக்க பொலிசார் ஈடுப்பட்டபோது இருதரப்பினருக்கு இடையே அடிதடி ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இதன் போது 500 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம், வன்முறை தொடர்பாக தற்போது வரை 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 225 பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக சுவிஸ் நாட்டினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாம்பர்க் பொலிசார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

அதில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஐந்து பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பொலிசார் தகவல் ஏதும் வெளியிடவில்லை. அதேசமயம், தடுப்புக்காவலில் இருக்கும் சுவிஸ் நாட்டினர் குறித்தும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments