39,000 அடி உயரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்: மிகவும் உணர்ச்சிமிக்க தருணம்

Report Print Basu in ஜேர்மனி
502Shares
502Shares
lankasrimarket.com

லுப்தான்சா விமானத்தில் பயணித்த பல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் 39,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது குழந்தை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லுப்தான்சா விமான நிறுவனத்தின் LH543 என்ற விமானம் 191 பயணிகளுடன் கொலம்பிய தலைநகர் போகோடாவிலிருந்து ஜேர்மனி பிராங்பேர்ட்டுக்கு பயணித்துள்ளது.

சுமார் 39,000 அடி உயரத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் விமானம் பறந்துக்கொண்டிருந்து போது, 38 வயதான பல்கேரியாவை சேர்ந்த Desislava என்ற கர்ப்பிணி பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனே விரைவாக செயல்பட்ட 13 பேர் கொண்ட விமான குழுவினர், பயணிகளில் மூன்று மருத்துவர்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

பின்னர் விமானத்தின் பின்புற பகுதியை பிரமாதமான பிரசவ அறையாக மாற்றி பிரசவம் பார்த்துள்ளனர், Desislavaவுக்கு நல்ல படியாக குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் Desislavaவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களில் ஒருவராக Nikolai பெயரே குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் அவசரமாக மான்செஸ்டரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கடந்த 1965ம் ஆண்டு முதல் லுப்தான்சா விமானத்தில் பிறந்த 11வது குழந்தை Nikolai என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விமானத்தில் குழந்தை பிறந்தது மிகவும் உணர்ச்சிமிக்க தருணமாக இருந்ததாக விமான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயண அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக லுப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்