70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட்டை திருடிய மர்ம கும்பல்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மனி நாட்டில் 70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட்டை லொறியோடு திருடிச் சென்ற மர்ம கும்பலை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Neustadt என்ற நகரில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் இத்திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கண்டெய்னர் லொறியில் வைக்கப்பட்டிருந்த Nutella மற்றும் Kinder வகைகளை சேர்ந்த சொக்லேட்கள் அனைத்தும் 50,000 முதல் 70,000 யூரோ மதிப்புள்ளது என பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

இத்திருட்டு சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, Bad Oldesloe என்ற நகரில் 53 கிலோ எடையுள்ள சொக்லேட்கள் ஆதரவின்றி கிடந்துள்ளது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், கடந்த மே மாதமும் கிலோ கணக்கில் சொக்லேட்கள் அனாதையாக கிடந்ததையும் பொலிசார் வழக்காக பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட சதியா? அல்லது பழுதான சொக்லேட்களை அகற்றுவதற்கு செய்யப்பட்ட நடவடிக்கையா என்பது குறித்து பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்