ஜேர்மனியில் குடியுரிமை கோரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அண்டை நாடான கனடாவில் குடியுரிமை கோரி செல்லும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கனடா மட்டுமின்றி ஐரோப்பிய நாடான ஜேர்மனியிலும் இக்கோரிக்கை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜேர்மன் தூதரக அலுவலகங்களில் குடியுரிமை கோரி ஒவ்வொரு மாதமும் சுமார் 100 அமெரிக்கர்கள் விண்ணப்பம் செய்கின்றனர்.

2017-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 1,190 அமெரிக்கர்கள் ஜேர்மன் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

2016-ம் ஆண்டு இதே மாதத்தில் ஒப்பிடுகையில் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், ஜேர்மனியில் குடியுரிமை பெறுவதற்கு தேவையான சட்ட விதிமுறைகள் என்ன என்பதை அறிந்துக்கொள்ள ஜேர்மன் அலுவலகங்களுக்கு அதிகளவில் தொலைப்பேசி அழைப்புகளும் வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்