மகனை காவலுக்கு வைத்துவிட்டு வங்கியில் கொள்ளையிட்ட தந்தை கைது

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஜேர்மனி நாட்டில் 11 வயது மகன் மற்றும் மனைவியை காவலுக்கு வைத்துவிட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள Cologne நகரில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

வங்கிக்கு வெளியே பெண் ஒருவரும் ஒரு சிறுவனும் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றுக்கொண்டு உள்ளனர்.

மேலும், அப்பகுதியில் இரும்பை உருக்கியது போல துர்நாற்றமும் வீசுகிறது என பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவலை பெற்ற பொலிசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

வங்கிக்கு வெளியே நின்றுக்கொண்டு இருந்த 27 வயதான பெண்ணிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, ‘எனது கணவர் இந்த இடத்தில் எங்களை சந்திப்பதாக கூறியுள்ளார். அவர் தற்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

சந்தேகம் அடைந்த பொலிசார் அருகில் நின்றுக்கொண்டு இருந்த 11 சிறுவனின் கைப்பேசி எண்ணை பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் சற்று முன்னர் அவரது தந்தை அனுப்பிய குறுஞ்செய்தி இருந்துள்ளது.

’வங்கிக்குள் சிரமப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் இருங்கள்’ என தந்தை எச்சரிக்கை விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம், தந்தை வங்கிக்குள் நுழைந்துள்ளதும் குடும்பவே இக்கொள்ளை திட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மோப்ப நாய் உதவியுடன் பொலிசார் தந்தையை கைது செய்துள்ளனர்.

இருவரின் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், 11 வயது சிறுவனின் நடவடிக்கை தொடர்பாக சீர்திருத்த பள்ளிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்