ஜேர்மனியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

உலகின் பல நாடுகளில் வேலை காலி இல்லை என்ற போர்டுகள் அலுவலக வாயிலில் தொங்குவதை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஜேர்மனியிலோ இதற்கு நேர் மாறாக சரியான பணியாளர்கள் கிடைக்க மாட்டார்களா என முதலாளிகள் வாசலைப்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

உண்மைதான், மேற்கு ஜேர்மனியில் 918,000 வேலை வாய்ப்புகளும் கிழக்கு ஜேர்மனியில் 265,000 வேலை வாய்ப்புகளும் தயாராக உள்ளன, வேலைக்கு விண்ணப்பிக்கத்தான் ஆளில்லை.

உற்பத்தித்துறையிலும் கட்டுமானத்துறையிலும் பணியாளர்களின் தேவை அதிகம் உள்ளது.

உற்பத்தித்துறைசார் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 161,000 வேலையிடங்கள் காலியாக இருப்பதாக விளம்பரங்கள் கொடுத்திருந்தன.

கட்டுமானத்துறைசார் நிறுவனங்கள் 98,000 வேலையிடங்கள் காலியாக இருப்பதாக விளம்பரங்கள் வெளியிட்டிருந்தன.

எதனால் இவ்வளவு வேலை காலியிடங்கள் உருவாகியுள்ளன என்று கேட்டால், பெரும்பாலான வேலை வழங்குவோர், விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களின் எண்ணிகை குறைவாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

வேலையளிப்பவர்கள், பணப்பரிசுகளும், ஊதிய உயர்வுகளும், குறைந்த விலையில் உணவும், வேலையிடத்திலேயே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வசதி வாய்ப்புகளும் செய்து கொடுத்தும் பணியாளர்களின் எண்ணிக்கை உயரவில்லை.

வேலைத் திறன் குறைபாட்டை சரி செய்யும் வகையில் ஜேர்மன் தொழில் நிறுவனங்கள் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள Hungary, Romania, Bulgaria மற்றும் Spain போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வல்லுனர்களைக் கொண்டு வந்து ஜேர்மனியிலிருப்போருக்கு பயிற்சியளிக்கும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்