Cataloniaவின் முன்னாள் அதிபரை நாடு கடத்தக் கோரும் ஜேர்மானிய அதிகாரிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட Cataloniaவின் முன்னாள் அதிபரை ஸ்பெயினுக்கு நாடு கடத்தும்படி ஜேர்மானிய விசாரணை அதிகாரிகள் வட ஜேர்மனியின் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Cataloniaவின் முன்னாள் அதிபரான Puigdemont மார்ச் 25 ஆம் திகதி முதல் ஜேர்மனியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு Cataloniaவின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் Puigdemontஇன் பங்களிப்பிற்காக கலகம் செய்ததாகவும் பொது மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஸ்பெயின் குற்றம் சாட்டியது.

பெல்ஜியத்திலும் ஃபின்லாந்திலுமாக சுற்றிக்கொண்டிருந்த Puigdemontக்கு எதிராக ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மார்ச் 25 ஆம் திகதி அவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவரை ஸ்பெயினுக்கு நாடு கடத்தும்படி ஜேர்மானிய விசாரணை அதிகாரிகள் வட ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Puigdemont நாடு கடத்தப்படுவது குறித்த முடிவுகள் எதையும் தற்போதைக்கு எடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜேர்மனி அரசும் Puigdemont தொடர்பான நீதிமன்றத்தின் முடிவில் நாடு தலையிடாது என்று அறிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்