தமிழன் என்ன அவ்வளவு மானம் கெட்ட பய மக்களா? கொதிக்கும் சீமான்

Report Print Basu in இந்தியா
தமிழன் என்ன அவ்வளவு மானம் கெட்ட பய மக்களா? கொதிக்கும் சீமான்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களை குறித்து ஏன் தமிழக அரசு வருந்தவில்லை, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், சென்னை போரூரில் குளத்துக்குள்ளே அடுக்குமாடி கட்டிடம் கட்டினான், சரிந்து விழுந்தது 60 பேர் உயிரிழந்தனர்.

60 பேரும் தெலுங்கன், ஒருவர் கூட தமிழன் கிடையாது. உயிரிழந்த 60 பேருக்கும் தமிழ்நாடு அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தது. ஆந்திரா அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.

சம்பவயிடத்திற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடனே வந்தார், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உடனே வந்தார்.

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரே ஏன் ஒருத்தன் கூட போல?

நாங்க என்ன அவ்வளவு ஈன ஜாதி பய மக்களா? அவ்வளவு கேடு கெட்டவர்களா? எங்களுக்கு ஒன்னுமே இல்லையா?

அவங்களுக்கு பத்து, பத்து லட்சம் நிவாரணம் கொடுத்தீங்களே, எங்களுக்கு ஒத்த ரூபாய் கொடுக்கவில்லையே, நாங்க என்ன அவ்வளவு மனம் கேட்ட மக்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments