கேலி செய்த இளைஞருக்கு தக்க பாடம்: வெளியான பெண்ணின் தர்ம அடி வீடியோ

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் பெண் ஒருவர் தன்னை கேலி செய்த இளைஞருக்கு தக்க பாடம் புகட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பக்பட் என்னும் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடியோவில், பெண் ஒருவர் தன்னை கேலி செய்த இளைஞருக்கு செருப்பால் தர்ம அடி கொடுக்கிறார். பலர் இதை சுற்றி நின்று போனில் வீடியோவாக பதிவு செய்கின்றனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்திலே இளைஞருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. இதன் பின்னர், இளைஞர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments