குற்றவாளி கைகாட்டிய முதல்வர் நமக்கு தேவையா? சசிகலாவை விளாசிய பிரபல நடிகர்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் நமக்கு தேவையில்லை எனவும் மறுதேர்தல் தான் தமிழகத்தின் தீர்வு எனவும் நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று விட்டார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகர் பார்த்திபன், மறைந்த ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியுள்ளது.

அதே போல குற்றவாளி என நீதிமன்றம் சொன்னவரால் தான் தற்போது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார்.

இதனால், குற்றவாளியான ஒருவர் கை காட்டுபவர்தான் நமக்கு முதல்வரா? இந்தக் குழப்பம் மக்களிடம் அதிமாகி இருக்கிறது.

இதற்கு தீர்வு மறு தேர்தல் தான் என கூறியுள்ள பார்த்திபன் இன்னும் நான்கு ஆண்டுகள் பிடிக்காத அரசை மக்கள் ஏன் சகித்து கொள்ள வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments