தனுஷ் எங்க மகன் தான்: கதறும் மீனாட்சி தம்பதியினர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

advertisement

இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தனுஷ் தரப்பில், மேலூர் தம்பதியினர் தாக்கல் செய்துள்ள மனுவில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அங்க அடையாளங்கள், பள்ளி சான்றிதழ்கள் என பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் கூறுகையில், தீர்ப்பு இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை, பணம் ஜெயித்துவிட்டது.

தனுஷ் எங்கள் மகன் தான் என அவரது மனசாட்சிக்கு தெரியும், தனுசுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோரிக்கை வைத்தோம்.

பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு, ஏழைக்கு ஒரு தீர்ப்பா, நீதி ஒருநாள் வெல்லும். கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments