ரஜினிகாந்த் தலையில் ஒன்றுமில்லை: விளாசிய மார்க்கண்டேய கட்ஜூ

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

தமிழ்நாட்டின் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயலாத ரஜினிகாந்த் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த நான்கு நாட்களாக சந்தித்து வரும் நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்ப்பார்பு மீண்டும் ரசிகர்களிடத்தில் வலுத்துள்ளது.

advertisement

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தென்னிந்தியர்கள் பலர் நடிகர் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர்.

அவர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வர் ஆக வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, சுகாதார குறைபாடு, விவசாயிகள் துயரம் போன்றவற்றுக்கு அவரிடம் தீர்வு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவரிடம் ஒன்றும் இல்லை என தாம் நினைப்பதாக கூறிய கட்ஜூ பிறகு ஏன் ரஜினி அரசியலுக்கு வர மக்கள் விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும், நடிகர் அமிதாப்பச்சன் போன்றே ரஜினி தலையிலும் எதுவும் இல்லை என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments