நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடி தர தயார் - ரஜினி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ.1 கோடி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அவர் கூறியபடி ரூ.1 கோடி நதிகள் இணைப்பதற்காக கொடுத்து, விரைவில் நதிகளை இணைக்க வழி செய்ய வேண்டும் என ரஜினியிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேரில் கேட்டுக் கொண்டார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற அய்யாக்கண்ணு, நடிகர் ரஜினிகாந்த் பிரதமரிடம் பேசி நதிகளை இணைக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

ரஜினியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நதிகள் இணைப்பிற்காக ஒரு கோடி ரூபாயை பிரதமரிடம் வழங்க வேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ரஜினி தாம் அந்தப் பணத்தை தர தயாராக உள்ளதாகவும், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரியை இணைக்க வேண்டும் என்று கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் போராட்டமானது அமைதியான வழியில் நடத்தப்பட வேண்டும் என்று ரஜினி வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments