மனைவியின் ஆபாச புகைப்படத்தை காட்டி 25 லட்சம் கேட்டு மிரட்டிய கணவன்

Report Print Raju Raju in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மனைவியின் ஆபாச புகைப்படத்தை காட்டி அவரிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மும்பையில் தனது கணவருடன் வசித்து வந்தார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக இளம் பெண் கோபித்து கொண்டு ராஜஸ்தானுக்கு வந்து விட்டார்.

சில நாட்கள் கழித்து பெண்ணின் செல்போனுக்கு ஆபாச புகைப்படம் வந்துள்ளது. இதை அனுப்பிய அவரின் கணவன் இதை வெளியே யாருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு 25 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதற்கு மனைவி மறுக்கவே, அவரது உறவினர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு புகைப்படத்தை கணவர் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து கணவர் மீது அந்த பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் சொந்த ஊருக்கு வந்த நிலையில் எனது உறவினர் ஒருவர் எனக்கு உதவினார்.

அவருடன் நான் நெருக்கமாக இருந்தேன். அவர் என்னை ஆபாச புகைப்படம் எடுத்து எனது கணவருக்கு அனுப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார், பெண்ணின் கணவர் மற்றும் உறவினரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments