மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் இல்லை: உச்ச நீதிமன்றம்

Report Print Peterson Peterson in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

திருமணம் ஆன, 15 வயதிற்கு மேல் உள்ள இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரது கணவர் உடலுறவில் ஈடுப்பட்டால் அது கற்பழிப்பு குற்றம் இல்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கற்பழிப்பு குற்றங்களை வரையறை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் நீண்டகாலமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

advertisement

இந்நிலையில், கற்பழிப்பு குற்றம் தொடர்பாக நேற்று முன் தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளனர்.

15 வயதிற்கு மேல் உள்ள இளம்பெண்ணிற்கு திருமணம் ஆகி, அவரது விருப்பம் இல்லாமல் கணவர் உடலுறவில் ஈடுப்பட்டால் அது கற்பழிப்பு குற்றமாக பார்க்கப்படமாட்டாது.

15 வயதிற்கு கீழ் உள்ள திருமணம் ஆன, அல்லது திருமணம் ஆகாத சிறுமிகளின் விருப்பதுடனும் அல்லது விருப்பம் இல்லாமலும் உடலுறவு கொண்டால் மட்டுமே அது கிரிமினல் குற்றம்.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை சில வழக்கறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

15 முதல் 18 வயதுடைய திருமணமான இளம்பெண்களுக்கு போதிய அனுபவ வயது இல்லாமல் இருப்பதால் இவர்களின் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொள்வதை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்