ஜெயலலிதா கைரேகை விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Fathima Fathima in இந்தியா
442Shares
442Shares
lankasrimarket.com

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா கைரேகை பதிவிட்டது தொடர்பான வழக்கில் மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

இதன்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில் ஆவண படிவத்தில் ஜெவின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது.

இதை ஜெயலலிதா சுயநினைவுடன் செய்தாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தேர்தல் முடிவை ரத்து செய்யக்கோரி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது அதிகாரி விளக்கம் அளிக்கையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த கடிதத்தின் பேரிலேயே ஆவணப் படிவத்தை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதா கைரேகை வைத்ததாக சான்றளித்த மருத்துவர் பாலாஜி 27ம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்