கமல்ஹாசனிடம் அவரது மகள் கேட்ட கேள்வி

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த பின்னர் அதிக எதிர்வினைகளை சந்திக்கின்றேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சித் தொடங்குவதை நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்தான் என்று வார இதழ் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த பின்னர், பலரும் என்னிடம் பல கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக எனது மகள் ஸ்ருதி, நீங்கள் அரசியலில் ஈடுபட்டால் எனது மகள் என்ன ஆவார்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நான், அவர் அப்படியேதான் இருப்பார். கொஞ்சம் நரை கூடிட்டா அப்பா இல்லைன்னு சொல்லிடுவியா?’’ என்றேன்.

என்னை உனக்கு அப்பாவாக தெரியுமா? உலக நாயகனாகத் தெரியுமா? அதே அப்பாவாகத்தான் இருப்பேன் என்றேன்.

நீங்கள் கலைஞன் என்பது முக்கியமில்லையா? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார், அது மாறவே மாறது என்று கூறினேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்