500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து! உடல்களை மீட்பதில் சிக்கல்

Report Print Kabilan in இந்தியா
117Shares
117Shares
lankasrimarket.com

தமிழகத்தில் பேருந்து ஒன்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் சுற்றுலா பேருந்து ஒன்று, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உதகை-குன்னூர் இடையே மந்தாடா எனும் இடத்தில், பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கனமழை பெய்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய அந்த பேருந்து 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்து முற்றிலும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 25 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து இரண்டாக உடைந்ததால், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தினால் உதகை-குன்னூர் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கோர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்