காட்டுக்குள் கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
309Shares
309Shares
lankasrimarket.com

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் அதிகமாக வழிப்பறி கொள்ளைகள் நடக்கின்றன.

குறிப்பாக, சோந்தியா கிராமத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவம் அடிக்கடி நடந்தேறியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தனது கிளினிக்கை பூட்டிவிட்டு மருத்துவர் அவரது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக தாக்கி காட்டுக்குள் இழுத்துச்சென்றுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற மருத்துவரை மரத்தில் கட்டிப்போட்ட கும்பல், தாய் மற்றும் மகளை துப்பாக்கி முனையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

தற்போது, மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளித்த புகார் மற்றும் அடையாளம் காட்டியதை வைத்து இதுவரை குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்