இணையத்தில் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானால்...

Report Print Meenakshi in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர் ஒருவர் தங்களுக்கு பிடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கமான ஒன்று தான்.

சமீபகாலமாகவே ஒருவரை பழிவாங்குவதற்காக அவரின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

advertisement

இதனை தடுப்பதற்கு சமூகவலைத்தள நிறுவனங்கள் முயற்சி எடுத்தபோதிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

அதிகளவில் இத்தகைய குற்றங்கள் நடப்பதால் பாதிக்கப்பட்டோர் மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

புகைப்படங்கள் இணையத்தில் உங்களுக்கு தெரியாமல் பகிரப்பட்டால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு உரிமையாளர் நீங்கள்தான். உங்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அந்த புகைப்படங்களை பகிரவோ பயன்படுத்தவோ உரிமை கிடையாது.

உங்களுக்கு தெரியாமல் யாராவது புகைப்படம் எடுத்திருந்தால் அது தவறு. அந்தரங்கங்களை புகைப்படம் எடுத்திருந்தால் அது குற்றமாகும். அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கலாம்.

இணையத்தில் உங்களுக்கு தெரியாமல் பகிரப்பட்டு இருக்கும் உங்கள் புகைப்படங்கள் உங்களுக்கு தவறு என்று தோன்றினால் உடனடியாக அதனை ஸ்கீரீன்ஷாட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஏனெனில் இணையத்தில் வேறு ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இது உங்களுக்கு உதவும்.

வழக்கறிஞரிடம் இது குறித்து அறிவுரையினை கேளுங்கள், தக்க ஆதாரங்களை அவரிடம் காட்டுங்கள், இதன் மூலம் குற்றவாளி தப்பிப்பதை தடுக்கலாம்.

வழக்கறிஞரின் ஆலோசனையின்படி காவல்துறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ புகார் தெரிவியுங்கள்.

குற்றம் சுமத்தும் ஆளுடன் உங்கள் உறவு, குற்றத்தின் அளவு ஆகியவற்றினை பொருத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

advertisement

இதனால் மன உளைச்சல் மட்டுமல்லாது, அதிக பொருட்செலவும் ஆகும். வழக்கில் நீங்கள் ஜெயித்துவிட்டால் செலவழிக்கும் பணத்திற்கான ரசீதை பத்திரப்படுத்து வையுங்கள். நீதிமன்றத்தின் மூலமாக செலவினை குற்றவாளியிடமிருந்து பெறலாம்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments