100 படங்களில் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்: இன்று தர்பூசணி விற்கும் சோகம்

Report Print Printha in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

நெல்லையை சொந்த ஊராக கொண்ட சிவா என்பவர் சுமார் 100 படங்களில் முகம் தெரிந்து, தெரியாமலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார்.

இவர் சினிமா ஆசையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கம் வந்தார். சமுத்திர கனியுடன் ஒரு படம், இமான் அண்ணாச்சியுடன் சில படங்கள், அருள், திருப்பாச்சி, பகவதி மற்றும் தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர்களுக்கு உதவியாளராக குடைபிடிப்பது, கண்ணாடி காட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார், அதற்கு ஒரு நாளைக்கு ரூ.550 தருவார்களாம்.

இது போன்ற வேலைகள் தினமும் இருக்காததால், தர்பூசணி பழங்களை வாங்கி, சாலிகிராமம் பகுதி முழுக்க தெருத்தெருவாக விற்பனை செய்து வருகிறார்.

தாய், தந்தையை இழந்த இவருக்கு 35 வயது, இன்னும் திருமணம் ஆகவில்லை. தன்னுடன் பிறந்த தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறாராம்.

எக்காலத்திலும் யார் கையையும் ஏந்தி நிற்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்