மாயமான மலேசிய விமான வழக்கை விசாரித்தவர் சுட்டுக் கொலை

Report Print Arbin Arbin in மலேசியா
0Shares
0Shares
Cineulagam.com

மாயமான மலேசிய விமானம் குறித்து விசாரணை நடத்தி வந்த முக்கிய அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விமானம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மலேசிய அரசால் நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான Zahid Raza கடந்த வியாழக்கிழமை மர்ம நபர்களால் மடகாஸ்கர் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆனால் Zahid Raza கொல்லப்பட்டிருப்பது மாயமான விமானம் தொடர்பில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை மூடிமறைக்கும் செயல் என பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மாயமான மலேசிய விமானம் தொடர்பில் கரை ஒதுங்கும் விமான பாகங்களில் உறுதிப்படுத்தப்பட்ட விமான பாகங்களை உரிய பகுதிக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பை Raza ஏற்றெடுத்திருந்தார்.

குறித்த விமானம் மாயமானது தொடர்பாக உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமெரிக்கரான புலனாய்வு அதிகாரி ஒருவர் தனது சொந்த செலவில் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது Raza கொல்லப்பட்டிருப்பது திட்டமிட்ட படுகொலை எனவும் அவர் தெரிவித்திருப்பது மாயமான மலேசிய விமானம் தொடர்பான வழக்கில் சர்வதேச தலையீடு இருப்பதை உறுதி செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மாயமான மலேசிய விமானத்தை தனது சொந்த செலவில் தேடி வரும் Blaine Gibson தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை மிரட்டல் வந்துள்ளதாகவும், வழக்கை விட்டுச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மடகாஸ்கரில் இருந்து குறிப்பிட்ட விமான பாகங்கள் கொண்ட ஆதாரங்களுடன் Raza மலேசியா செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய விமானம் MH370, கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் திகதி மாயமானது. பல நாடுகள் கூட்டாக மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இதுவரை சொல்லிக் கொள்ளும் வகையில் எவ்வித ஆதாரங்களும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்