விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் தராமல் இருக்க கணவன் செய்த செயல்

Report Print Raju Raju in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரிந்த மனைவிக்கு ஜீவானாம்சம் தராமல் தப்பிக்க மனைவி வேறு நபரை இரண்டாவது திருமணம் செய்து விட்டார் என போலி சான்றிதழை சமர்ப்பித்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளார், இதையடுத்து மனைவிக்கு மாதா மாதம் ஜீவனாம்சம் கொடுக்க கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனைவிக்கு ஜீவானாம்சம் தராமல் இருக்க கணவன் மோசடி வேலையை கையாண்டுள்ளார்.

அதன்படி தனது முன்னாள் மனைவி ஓமனில் வேறு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறி அதற்கான திருமண சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் சான்றிதழ் போலி என அதிகாரிகள் கண்டுப்பிடித்த நிலையில் நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

அங்கு குற்றம்சாட்டபட்டவர் கூறுகையில், திருமண சான்றிதழை நான் போலியாக தயாரிக்கவில்லை.

என் உறவினர் ஒருவர் சமீபத்தில் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்தார், அந்த சான்றிதழை எனக்கு இமெயில் மூலம் அனுப்பினார்.

அதை தான் என் முன்னாள் மனைவியின் திருமண சான்றிதழ் என பொய்யாக கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது வரும் 17-ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்