சவுதி போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹவுத்தி போராளிகள்: வெளியான ஆதாரத்தால் பரபரப்பு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் தாக்கி வீழ்த்திய காணொளி காட்சிகளை ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் வெளியிட்டுள்ளது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் ஏமனில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சவுதி போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட சவுதி அரசு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த போர் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணம் மேற்கொண்ட விமானியை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.

ஆனால் இதை மறுத்துள்ள ஹவுத்தி போராளிகள், சவுதி போர் விமானத்தை தாங்களே தாக்கி அழித்ததாக அதிகாரபூர்வ ஊடகத்தில் செய்தி வெளியிட்டனர்.

மட்டுமின்றி குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்றை இன்று வெளியிட்டுள்ள ஹவுத்தி போராளிகள் அதை உறுதி செய்துள்ளனர்.

ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகளுக்கும் சவுதி அரேபிய ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தில் இதுவரை சுமார் 10,000-கும் மேற்பட்ட ஏமன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்