புத்தம் புதிய BMW M5 காரின் புகைப்படங்கள் வெளியாகின

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஆடம்பர கார்களை வடிவமைத்து சந்தைப்படுத்தி வரும் BMW நிறுவனம் BMW M5 எனும் புத்தம் புதிய காரினை விரைவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யவுள்ளது.

இக் காரின் சிறப்பம்சங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

advertisement

இதனை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக புகைப்படம் மற்றும் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளன.

சுமார் 600 குதிரைவலுவில் இயங்கக்கூடிய இக் காரின் அனைத்து சில்லுகளும் செயற்படக்கூடியன.

அதாவது என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் என்ஜின் ஆனது 4.4 litre V8 ரகத்தை சார்ந்ததாக காணப்படுகின்றது.

இதன் விலை உட்பட ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்