விபத்துக்களை குறைக்க கார் மின் விளக்குகளில் புரொஜெக்டர்கள்: விரைவில் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனைச் சேர்ந்த கார் வடிவமைப்பு நிறுவனமான Maybachs ஆனது புரொஜெக்டர்களுடன் கூடிய மின் விளக்குகளை வடிவமைத்துள்ளது.

டிஜிட்டல் மின்விளக்கு தொழில்நுட்பத்தினைக் கொண்ட இந்த புரொஜெக்டர்கள் பல மில்லியன் மெகாபிக்சல்களைக் கொண்ட விம்பங்களை வீதியின் மேற்பரப்பில் உருவாக்கவல்லன.

இதன் ஊடாக பல்வேறு வீதிச் சமிக்ஞைகளையும் வீதியில் முற்கூட்டியே காட்டுவதன் ஊடாக அவதானமாக செயற்பட வைக்கின்றது.

அத்துடன் முன்னே பயணிக்கும் வாகனங்களுக்கு இடையிலான தூரத்தினை துல்லியமாக கணித்தும் சொல்கின்றது.

புத்திசாலித்தனமான ஹெட்லைட்கள் என அழைக்கப்படும் இவற்றில் சென்சார்கள் மற்றும் சிறிய கணினி என்பன இணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான வாகனங்களை உலகிற்கு அறிமுகம் செய்வது தொடர்பில் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் இந் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே புரொஜெக்டர் மின்விளக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்