வெள்ளத்தில் மூழ்கிய சீனா நகரம்.. 1 லட்சம் மக்களின் கதி என்ன?

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சீனாவில் பொழிந்த கனமழை காரணமாக ஜிலின் நகரத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஜிலின் நகரத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

advertisement

வெள்ளத்தால் தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரத்தை விட்டு இடம்பெயர வேண்டியதாக நகரின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், சேறு, குப்பைகள், பழுதான பாலங்கள் மற்றும் தொலைத்தொடர்பு, மின் இணைப்புகள் என அனைத்தையும் சரி செய்யும் பணியில் சுமார் 32,360 தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments