வடகொரியாவின் அடுத்த ஏவுகணை பரிசோதனை எப்படி தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

வடகொரியாவின் இச்செயலுக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

advertisement

ஆனால் வடகொரியா தன்னுடைய செயலில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பது போல், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் வடகொரியாவின் இந்த செயலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது, ஆனால் அதற்கும் வடகொரியா அஞ்சுவது போல் இல்லை.

இந்நிலையில் வடகொரியா தற்போது நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை நடத்த அது முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வட கொரியாவிடம் உள்ள புகுகுக்சோங் -1 எனும் பெயர் கொண்ட நீர்மூழ்கி ஏவுகணை வசதியை மேம்படுத்த முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நீர்மூழ்கி ஏவுகணை வட கொரியா முதல் முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்