இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ சுட்டுக்கொலை: சிரியாவில் துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
278Shares
278Shares
lankasrimarket.com

வான் தாக்குதலால் சிதைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து கடந்த ஆண்டு பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்த இளைஞரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

22 வயதான Abu Kifah வின் மரணம் அந்த பகுதி மக்களை மீளா துயரத்தில் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதான ஊடகங்கள் அனைத்திலும் தலைப்புச் செய்தியானது இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை Abu Kifah மீட்டெடுத்த சம்பவம்.

சிரியாவில் வான் தாக்குதலின் போது சிதைந்து நொறுங்கிய வீட்டின் இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை Abu Kifah மீட்டெடுத்தார்.

ஒரு வயது கூட நிரம்பாத அந்த குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்த Abu Kifah கண்ணீர் விட்டு கதறியது தங்களது நினைவில் இருந்து நீங்க மறுப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் The White Helmets எனப்படும் தன்னார்வ மீட்பு படை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் உறுப்பினராக உள்ள Abu Kifah மற்றும் அவரது நண்பர்கள் குழு ஒன்று குறித்த மீட்பு படையின் அலுவலகத்தில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்து துப்பாக்கியால் Abu Kifah உள்ளிட்ட 7 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

Abu Kifah ன் இழப்பால் அந்த நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. Sarmin பகுதியில் கொல்லப்பட்ட 7 பேருக்கும் பொதுவாக இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

Sarmin பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் ஒன்றை தாக்குவதுதான் பயங்கரவாதிகளின் திட்டமாக இருக்கலாம் எனவும், ஆனால் அப்பாவி இளைஞர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்