அஜித் மற்றும் சூர்யாவை சந்தித்த பிரபல விளையாட்டு வீராங்கனை: வைரல் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகர் அஜித்குமார் மற்றும் சூர்யாவை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து சந்தித்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வாங்கி கொடுத்தவர் பி.வி சிந்து.

இவர் சமீபத்தில் விளையாடிய பேட்மிண்டன் போட்டிகளை நடிகர் அஜித் அவர் குடும்பத்துடன் சென்று நேரில் பார்த்துள்ளார்.

அதே போல நடிகர் சூர்யாவும் தனது குடும்பத்துடன் சேர்ந்து பிவி சிந்து விளையாடுவதை பார்த்துள்ளார்.

இந்நிலையில் அஜித், ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா மற்றும் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகள் தியா மற்றும் மகன் தேவுடன் சிந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்