சதமடித்த கணவருக்கு அனுஷ்காவின் காதல் வாழ்த்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் அடித்ததற்காக அவரின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்த்தினை கதை வடிவில் தெரிவித்துள்ளார்.

டர்பனில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் விளாசினார்.

மேலும், ஆட்டநாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார். இந்நிலையில், கோஹ்லியின் காதல் மனைவி அனுஷ்கா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தொலைக்காட்சியில் கோஹ்லி விளையாடிய காட்சிகளை படமெடுத்து, அதனுடன் இதய வடிவத்துடன் ’100’ என்றும், ‘What a guy' என்றும் குறியீடு ஒன்றையும் சேர்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த முறை டெஸ்ட் போட்டியில், கோஹ்லி 150 ஓட்டங்கள் எடுத்த போது, தனது கழுத்தில் இருந்த திருமண மோதிர சங்கிலிக்கு முத்தமிட்டு, அனுஷ்காவிற்கு தனது காதலை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்