விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா தயாஸ்ரீ ஜெயசேகரா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

இலங்கை உள்ளூர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பை தயாஸ்ரீ ஜெயசேகரா ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்ச்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் விளையாட்டு துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் போட்டியிட்ட இடத்தில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யவுள்ளாராம்.

தயாஸ்ரீ எல்லா விளையாட்டுக்கும் அமைச்சர் என்றாலும், கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவராவார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் திலங்க சுமதிபாலாவுடன் தயாஸ்ரீ நெருக்கமான தொடர்புடையவர் எனவும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்