கேப் டவுனில் தண்ணீர் பஞ்சம்: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் நிதியுதவி

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒன்றாக நிதியுதவி அளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தலைநகர் கேப் டவுனின் சில பகுதிகள் கடுமையன வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் உச்சகட்டமாக கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 50 லிற்றர் தண்ணீர் மட்டுமே ஒரு சராசரி குடிமகன் பயன்படுத்த வேண்டும் என மேயர் Patricia de Lille உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆங்காங்கே போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைத்திட வேண்டும்.

இதற்கு உதவிடும் வகையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இணைந்து ஒரு லட்சம் ரேண்ட் நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.

இந்த நன்கொடையை பெற்றுக்கொண்ட கிவ்வர்ஸ் அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் சுலைமான், நல்ல முறையில் இந்த தொகை பயன்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்