பிரபல வீரர்கள் இடையே முற்றிய மோதல்: வைரலாகும் வீடியோ

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

டேவிட் வார்னருக்கும் டி-காக்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தபோட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 351 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்கா அணி 162 ஓட்டங்களும் எடுத்திருந்தன.

இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 227 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

அதன்பின் 417 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் எடுத்துள்ளன. குயின்டன் டி காக் 81 ஓட்டங்களுடனும், மோர்னே மோர்க்கல் ஓட்டம் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியின் போது டேவிட் வார்னருக்கும், டி காக்குக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின் போட்டி நேரம் முடிவடைந்த நிலையில், இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பிய போது முன்னே சென்ற வார்னர், பின்னால் வந்த டி காக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த சிசிடிவி கெமராவில் பாதிவாகியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்