ஒரு தாய்க்கு மகள் எழுதிய உணர்வுப்பூர்வமான கடிதம்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
0Shares
0Shares
lankasrimarket.com

இந்த உலகில் பெண் குழந்தைகளுக்கு தந்தையிடம் இருந்து நல்லறிவு கிடைத்தாலும், அப்பெண்ணை பண்பாடும், ஒழுக்கமும், குணநலன்களும் கொண்ட பெண்ணாக வளர்ப்பதில் ஒரு தாயின் பங்கு அளப்பறியது.

ஒரு பெண் தான் பிறந்த வீட்டில் மட்டுமின்றி புகுந்த வீட்டிலும் சரி, இந்த சமுதாயத்திலும் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தன்னை பெற்றெடுத்த தாயின் அறிவுரை மிக முக்கியமான ஒன்று.

அந்த அளவுக்கு பச்சிளம் குழந்தையில் இருந்து பருவம் அடையும் வரை ஒரு தாய் தனது மகளுக்கு தேவையான அனைத்தையும் கற்றுக்கொடுத்து ஒரு பொறுப்புள்ள பெண்ணாக மாற்றுகிறாள்.

தனது வீட்டில் கற்றுக்கொண்ட அடிப்படை பண்புகளே ஒரு பெண்ணை இந்த சமுதாயத்தில் முழு மனிதனாக சித்தரிக்க வழிவகுக்கிறது.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு பெண்களும் தனது தாய் கற்றுக்கொடுத்தவற்றை நினைவில் கொண்டு அங்கு தங்களது புது வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

அந்த வாழ்க்கையில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்களை சந்திக்கும்போதுதான் தங்களது தாய் செய்த தியாகம் தங்கள் கண்முன்னே வந்து அவர்களை பற்றி சிந்திக்க தோன்றுகிறது.

ஒரு பெண் தனது தாய்க்கு எனது உணர்வுப்பூர்வமான கடிதம் இதோ,

அன்புள்ள அம்மாவுக்கு

நான் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுன் என்னை ஆசையோடு வந்து அணைத்துக்கொள்வீர்கள், விளையாட முடித்தபின்னர் அழுக்கு முகத்துடன் இருக்கும் என்னை சுத்தம் செய்வீர்கள்.

வீட்டில் அமைதியான முறையில் இருக்கும் நான், எனது பள்ளியில் தோழிகளிடம் சண்டையிட்டு ஆசிரியையிடம் தண்டனை வாங்கியுள்ளேன், இதனை நான் உங்களிடம் மறைத்துள்ளேன்.

நான் செய்யும் பல்வேறு குறும்புகள் உங்கள் இரவு தூக்கத்தை கலைத்துள்ளது, பள்ளி, கல்லூரி காலம் முடித்து பணிக்கு சென்றபோது, அங்கு அலுவலகத்தின் நான் தாமதமாக ஊதியம் வாங்கி வந்தால் பெரிதாக கண்டுகொள்ளமாட்டாய், எனது அலுவலக அதிகாரியிடம் திட்டுவாங்கிவிட்டு மன உளைச்சலோடு வரும் எனது உள்ளுணர்வை புரிந்துகொண்டு எனக்காக காத்திருப்பாய்.

தற்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான் புதிய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன், புது பொறுப்புகள் புதிய சவால்கள், புதிய உறவுகள், புதிய மனிதர்கள் என எனது வாழ்வு புதுவிதமாய் பயணிக்கிறது.

எனது கணவர் வீட்டில் இருப்பவர்கள் என்னை அன்போடு பார்த்துக்கொண்டாலும், அந்த இடத்தில் ஒரு நபரை நான் கண்டிப்பாக இழந்து தவிக்கின்றேன், அது நீதான் அம்மா.

எனது மனதில் இருக்கும் வலி, எனது நடைமுறையில் ஏற்படும் மாற்றங்களை இங்கு உள்ளவர்கள் உடனடியாக புரிந்துகொள்வதில்லை. அங்கு இருக்கும்போது எனது கண்களை பார்த்தே எனது மன வலியை நீ அறிந்துகொள்வாய்.

நான் தற்போது பொறுப்புள்ள பெண்ணாக மாறியுள்ளேன், இப்போதும் உங்கள் கைகளால் என்னை அரவணைக்கும்போது ஏற்படும் உடல் சூட்டில் இதமாய் அவ்வப்போது இளைப்பாறுகிறேன்.

இங்கு நடப்பவைகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டாலும், இன்னும் அதிகமானவை உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு இருக்கிறது.

9 மாத கர்ப்பகால வேதனை, தூக்கமில்லா இரவுகளை உணர்கிறேன், இப்போது கூட குழந்தையாகும் வாய்ப்பு கிடைத்தால் பள்ளி வாகனத்தில் இருந்து நான் துள்ளிக்குதித்து வருகையில் என்னை நீ அனைத்துக்கொள்ளும் நாட்கள் வேண்டும்.

உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டவை தான் தற்போது நான் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறது, இப்படி ஒரு பொறுப்புள்ள பெண்ணாக உருவாக்கியுள்ள உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ல வ் யூ அம்மா, இன்று எப்போதும் என்றென்றும்.

இப்படிக்கு

உங்கள் செல்ல மகள்

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments