உயிரினங்கள் வாழ புதிய இடம்தேடி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com

மனிதர்கள் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களும் வாழக்கூடிய இடம் ஒன்றினை தேடி விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பூமியில் கூட உயிரினங்கள் இதுவரை காணப்படாத பகுதிகள் அமைந்துள்ளன.

அப்பகுதிகளிலும் உயிரினங்களை வாழ வைக்க ஏதாவது சாத்தியம் இருக்கின்றதா என தற்போது ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அந்தாட்டிக்காவில் உள்ள ஐஸ் வளைவுகளில் எங்காவது சூடான பகுதிகள் காணப்படுகின்றனவா என ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

செயற்படு நிலையில் உள்ள எரிமலையினைக் கொண்டுள்ள Ross Island பகுதியிலேயே இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இங்கு விலங்குகள் மட்டுமன்றி தாவரங்களும் வாழக்கூடிய சாத்தியங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்