சூரியனை போன்ற பல மடங்கு சக்தி வாய்ந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Report Print Kavitha in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரியனை போன்று அளவும், பரப்பளவும் கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டென்மார்க் ஆர்கஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் கரோப் எனும் விஞ்ஞானி கெப்ளர் விண்கலம் ஒன்றை அனுப்பி போட்டோ மற்றும் தகவல் அடிப்படையில் நடத்திய ஆய்வு ஒன்றிலே இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் இந்த புதிய நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.

சூரியனை போன்றே கடுமையான வெப்பத்துடன் இது காணப்படுகின்றது.

இதற்கு சூரியனின் வயது அளவே இதுவும் உள்ளது.

இந்த புதிய நட்சத்திரத்தில் உள்ள ரசாயன பொருட்களின் அளவு சூரியனை விடவும் மாறுப்பட்டு காணப்படுகின்றது

சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற ரசாயன பொருட்கள் அதிக அளவில் உள்ளன ஆனால் புதிதாக கண்டுபிடித்துள்ள நட்சத்திரத்தில் இவை 2 மடங்கு உள்ளன.

இது வெளியிடும் வெப்பம் மற்றும் ரசாயன பொருட்களால் பூமியின் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்