நிலவில் எரிமலைக் குழம்பு: அதிர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com

பூமியின் துணைக் கிரகமான நிலவில் எரிமலைக் குழம்பு இருக்கலாம் என சந்தேகிக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இப் புகைப்படமானது நிலவின் வட துருவத்தில் எடுக்கப்பட்டுள்ளது, இதில் சில பெரிய துளைகள் இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகின்றது.

இவை அனைத்தும் எரிமலைக் குழம்புகள் வெளியேறக்கூடிய துளைகளாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக நிலவானது வறண்ட மேற்பரப்பினைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுவந்தது.

எனினும் சமீபகால ஆராய்ச்சிகளின்படி நிலவானது குளிர் மேற்பரப்பினை கொண்டது என குறிப்பிடப்படுகின்றது, இவ்வாறான நிலையிலேயே இப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்