மனிதக் கரு முட்டைகளை வைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள்

Report Print Kabilan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதக் கருமுட்டையை முழு முதிர்ச்சி அடையும் வரை, ஆய்வகத்தில் வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எலி முட்டைகளை ஆய்வகத்தில் வளர்த்ததன் அடுத்தகட்டமாக, மனித கருமுட்டைகளை ஆய்வகத்தில் வளர்த்துள்ளனர்.

மேலும், கருமுட்டைகள் முழு முதிர்ச்சியடைவதற்கு முந்தைய நிலை வரை ஆய்வகத்தில் வளர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கருமுட்டைகளின் வாயிலாக பிறக்கும் குழந்தைகள், ஆரோக்கியமானதாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால், குழந்தை பிறப்பதில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இந்த முறை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இது எதிர்காலத்தில் மிக பயனுள்ளதாக இருக்கும்.

இது வெற்றி பெற்றால் எதிர்காலத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கருவை பாதுகாத்து, ஆரோக்கியமான குழந்தையை பெற முடியும்.

மேலும், கருமுட்டை வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்