விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த முத்திரைகளே பிரித்தானியாவில் காணப்படுவதாகவும் எனினும், இதற்கு ரோயல் மெய்ல் என்ற பிரித்தானியாவின் அஞ்சல் துறையின் அனுமதி கிடைத்துள்ளதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகரிடம் விபரங்களை கோரியுள்ளது.
இதனையடுத்து, அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் என்று வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், விடுதலைப்புலிகளின் முத்திரைகள் பிரித்தானியாவில் பயன்பாட்டில் உள்ளமை குறித்து மறுப்பையோ, உறுதிப்படுத்தலையே வெளியிடவில்லை என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
