செய்தி
பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஐ.நா சிறப்பு பிரதிநிதி
[ வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2012, 03:52.29 AM GMT ]

இலங்கையின் பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் ஒழுங்காற்று நடவடிக்கைகளை இலங்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் தனித்துவத்துக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி கேப்ரியல் க்னவுல் கோரியுள்ளார்.

அப்படி இல்லாத நிலையில் ஷிரானி பண்டாரநாயக்க மீதான ஒழுங்காற்று நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது தொடர்பான இலங்கை அரசியல் சட்டத்தின் 107ஆவது பிரிவின் மூலம் இலங்கை நாடாளுமன்றம், இலங்கையின் நீதித்துறையின் மீது கணிசமான செல்வாக்கை செலுத்துவதாக தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், இது இலங்கை நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வு என்கிற தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறை குறித்து விடுத்திருக்கும் விரிவான அறிக்கையில், இலங்கையில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் தொடர்பில் அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பதில் நடவடிக்கைகள் மற்றும் தலையீடுகளின் ஒருபகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமைவதாக கொள்ளவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் மீது நேரடி தாக்குதல்களோ மறைமுக அழுத்தங்களோ இல்லாமல் அவர்கள் தங்களின் தொழில்ரீதியிலான அலுவல்களை எந்தவித அச்சமும், முறையற்ற தலையீடும், வெளியார் அழுத்தங்களும் இல்லாமலும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமையும் வகையிலும் செய்யக்கூடிய சூழலை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

இலங்கையின் நீதித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் தலையீடுகள் தொடர்பாக இலங்கை அரசு உண்மையான விசாரணைகளை நடத்துவதில்லை என்றும், இதை செய்தவர்கள் அதற்கு பொறுப்பாக்கப்படுவதில்லை என்றும் சுயாதீனமான மனித உரிமை நிபுணர்கள் அறிக்கை அளித்திருப்பதாகவும் கேப்ரியல் க்னவுல் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யமுடியாத தன்மையானது அந்நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை தாங்கும் முக்கிய தூணாக இருப்பதாகவும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கொள்கையில் தலையீடுகள் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் கேப்ரியல் க்னவுல், நவம்பர் முதல் தேதி இலங்கை நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் தொடர்பாக தனது சங்கடங்களையும் தெரிவித்திருக்கிறார்.

மிகமோசமான நடத்தைகள் அல்லது திறமையற்ற தன்மை ஆகியவை காரணமாக மட்டுமே நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் அதுவும்கூட முறையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையிலான நியாயமான வழக்கு விசாரணைகள் நடந்த பின்னரே அது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு நடைமுறைகளின் முடிவுகள் கூட சுயாதீனமான மீளாய்வுக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுயாதீனமான நீதிபதிகளை பழிவாங்குவதற்கான ஒரு வழிமுறையாக ஒழுங்காற்று நடவடிக்கைகளை பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றும் கேப்ரியல் க்னவுல் கண்டித்திருக்கிறார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 04:40.02 AM ]
யாழ்ப்பாணம் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
[ Monday, 20-05-2013, 04:12.36 AM ]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Monday, 20-05-2013, 04:06.33 AM ]

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

[ Monday, 20-05-2013, 03:41.54 AM ]

திருகோணமலையில் வாய் பேச முடியாத சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

[ Monday, 20-05-2013, 02:41.12 AM ]
அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Monday, 20-05-2013 02:50:11 GMT ]
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Monday, 20-05-2013 03:54:21 GMT ]
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
[ Monday, 20-05-2013 03:09:32 GMT ]
ஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.