வியாழக்கிழமையில் இவற்றைச் செய்தால் செல்வம் கொட்டுமாம்

Report Print Fathima Fathima in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.

குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

  • வியாழன் அன்று குருவை வணங்கி விரதம் இருக்கலாம்.
  • அன்றைய தினம் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலரை வாங்கிச் சாற்றலாம், குரு பகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி வரலாம்.
  • குருவுக்கு உகந்த கொண்டை கடலையை மாலையாகக் கட்டி போடலாம்.
  • சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கி வந்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.
  • வியாழக்கிழமைகளில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்த பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.
  • வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளைத் தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • வியாழக்கிழமைகளில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் தரித்திரம் நீங்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்