திருக்கைலாய மலையின் உச்சியில் யாழ் இந்துவின் மைந்தன் சாதனை!

Report Print Samaran Samaran in இலங்கை
52Shares
52Shares
lankasrimarket.com

யாழ் இந்துவின் மைந்தன் Rasarathinam Rameshkumar, கடந்த வெள்ளிக்கிழமை, 31, மே, 2018 அன்று திருக்கைலாய மலையின் உச்சியை அடைந்து அங்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கொடியேற்றி கல்லூரிக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

100 மைல்களுக்கு மேலாக கரடுமுரடான மலைகளை 3 நாட்கள் தொடர்ச்சியாக நடந்து, கடல் மட்டத்திலிருந்து 19,000 அடி உயரம் ஏறி இந்த சாதனையை படைத்த இவர் யாழ் இந்துக் கல்லூரியின் 84 ஆண்டு உயர்தர பிரிவைச் சேர்ந்தவர்.

இதுவரை காலத்தில், திருக்கைலாய மலையின் உச்சியை அடைந்த முதல் யாழ் இந்துவின் மைந்தன் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

இச்சாதனையைப் பாராட்டி "கைலாசமணி" எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்

தற்போது UK பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தினர் செயற்பாட்டுக் குழுவில் மூதூர் சபாநாயகம் படிப்பகம் கல்வித் திட்டத்தை திறமையாக வழி நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்