இலங்கை, சுவிட்ஸர்லாந்துக்கிடையில் புதிய உடன்படிக்கை

Report Print Ajith Ajith in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்டமுறையான உதவியளித்தல் தொடர்பாக சுவிட்ஸர்லாந்துக்கும் இலங்கைக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குற்றவியல் விடயங்களின் பரஸ்பர சட்டமுறையான உதவியளித்தல் தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் சுவிட்ஸர்லாந்துக்கும் இலங்கைக்குமிடையே கைச்சாத்திடுவதற்கும், பின்னர் அந்த உடன்படிக்கையினை வலுவாக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments