சாலை விபத்தில் கவிழ்ந்த லொறி: 400 கோழிகள் பலி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
294Shares
294Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் 400 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள Yverdon நகரில் இருந்து பேர்ன் நகருக்கு கண்டெய்னர் லொறி ஒன்று 4,500 கோழிகளை ஏற்றிக்கொண்டு நேற்று புறப்பட்டுள்ளது.

பேர்ன் நகரை இணைக்கும் A1 நெடுஞ்சாலையில் லொறி சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லொறி தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் ஓட்டுனர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக லொறியில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளில் 400 கோழிகள் உயிரிழந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் கவிழ்ந்து கிடந்த லொறியை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், எஞ்சிய கோழிகளை மற்றொரு லொறி வழியாக பேர்ன் நகருக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

நேற்று பிற்பகல் வரை நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்