பட்டாசு வெடித்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டு போட்டியின்போது பட்டாசு வெடித்த வாலிபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள Appenzell மாகாணத்தை சேர்ந்த 24 வயதான கால்பந்து ரசிகருக்கு தான் நீதிமன்றம் இத்தீர்ப்பை விதித்துள்ளது.

advertisement

கடந்தாண்டு பெப்ரவரி மாதம் FC St Gallen அணிக்கும் FC Lucerne அணிக்கும் இடையே கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

லூசேர்ன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை காண வாலிபரும் சென்றுள்ளார். அப்போது, தன்னுடைய விருப்பமான அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்துள்ளார்.

சில பட்டாசுகளை மைதானத்தை நோக்கியும் வீசியுள்ளார். இந்நிலையில், பார்வையாளர்கள் நோக்கி பட்டாசு ஒன்று வெடித்ததில் 40 வயதுமிக்க நபருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது அவருக்கு கேட்கும் திறன் பறிப்போய்யுள்ளது. விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த குற்றத்திற்காக வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், கேட்கும் திறனை இழந்த நபருக்கு 12,000 பிராங்க் இழப்பீடும் வழங்க வேண்டும் என வாலிபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுவிஸ் வரலாற்றில் கால்பந்து விளையாட்டு ரசிகர் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்